வீட்டு குளியலறை கதவை பூட்டிய புதுப்பெண்.. வெளியில் வந்த கணவன் கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான 3 மாதங்களில் புதுப்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் அவர் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேபாளத்தை சேர்ந்தவர் ராஜ். இவரும் ரூபா கிருஷ்ணபகதூர் (22) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் இந்தியாவின் மும்பை நகருக்கு தம்பதி குடிவந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ராஜ் தனது வீட்டு குளியலறைக்குள் சென்றார்.

அப்போது குளியலறை கதவை வெளிப்பக்கமாக பூட்டிய அவர் மனைவி ரூபா பின்னர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெகுநேரமாக ராஜ் கதவை தட்டியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து கொண்டு அவர் வெளியில் வந்த போது ரூபா தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ரூபாவின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதோடு அவர் எழுதியிருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள். அதில், இது என்னுடைய தவறு தான் என எழுதியிருந்தது.

இந்நிலையில் ரூபாவின் சகோதரர் பொலிசில் அளித்த புகாரில், ராஜுக்கு திருமணத்துக்கு பின்னர் வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

இதையறிந்த ரூபா கணவர் தனது துரோகம் செய்துவிட்டாரே என துடித்து போனார், இதையடுத்தே அவர் தற்கொலை செய்தார் என தெரிவித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பொலிசார் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்