இன்றுமுதல் பொலிசாருக்கு வார விடுமுறை! அசத்தும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

Report Print Kabilan in இந்தியா

ஆந்திர மாநில பொலிசாருக்கு இன்றுமுதல் வார விடுமுறை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டதில் இருந்து அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். அவரது திட்டங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் தான் அம்மாநில பொலிசாருக்கு வாரம் ஒரு முறை விடுமுறை வழங்க வேண்டும் என்ற ஜெகன் மோகன் ரெட்டியின் அதிரடியான திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில டி.ஜி.பி கூறுகையில், ‘காவல் துறையில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என முதல்வர் முடிவு செய்தார். இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு கமிட்டியின் மூலம் மொத்தம் 19 மொடல் விடுமுறை முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதில் அந்தந்த பகுதியில் உள்ள யூனிட் அதிகாரிகள் ஏதாவது ஒரு மொடலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். யூனிட் அதிகாரிகள் வழங்கும் கருத்துக்களுக்கு ஏற்ப சில நாட்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். தலைமை காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரை விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்த வார விடுமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆந்திராவில் செயல்பட்டு வரும் சட்டவிரோதமான மதுபானக் கடைகள் அகற்றப்படும் என்றும், அம்மாநிலத்தில் மண் அள்ளுவதற்கு 15 நாட்களுக்கு தடை என பல அதிரடி நடவடிக்கைகளை ஜெகன் மோகன் ரெட்டி எடுத்து வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்