தற்கொலைக்கு முன் கடைசியாக ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்ட ஜோடி

Report Print Vijay Amburore in இந்தியா

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமான பெண் தன்னுடைய காதலனுடன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷாம்கர் சௌத்ரி (21) என்பவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர் அஞ்சு சுந்தர் (21) என்கிற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இருவரும் நாட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டனர். சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்த செல்போன் மற்றும் மதுபாட்டில்களை கைப்பற்றினர்.

இதுகுறித்து பொலிஸார் ஒருவர் கூறுகையில், இருவரும் மது அருந்திவிட்டு தற்கொலை செய்துள்ளனர். தற்கொலைக்கு முன்பாக ஆடியோ ஒன்றினை பதிவு செய்துள்ளனர். மேலும், நிறைய புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்