சிறையில் இருந்து சசிகலா வெளியில் வந்ததும் என்ன நடக்கும் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

சசிகலா தலைமையின் கீழ் அதிமுக வந்தால் மட்டுமே அக்கட்சி வலிமையான கட்சியாக வர வாய்ப்பிருக்கிறது என்று பாஜக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை அல்லது இரட்டை தலைமை வேண்டுமா என்று விவாதிக்கப்பட்டு இறுதியில் தற்போது நடைமுறையே பின்பற்றலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமித்ஷாவிடம் தெரிவிக்க அதிமுக அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு ஆலோசனை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக தலைமையோ இப்போதைக்கு அதிமுகவில் இரட்டை தலைமையே இருக்கட்டும் என்று அறிவுறுத்தியதாக கூறுகின்றனர்.

மேலும் அதிமுகவிற்கு வலிமையான தலைமை ஏற்க சசிகலா தான் சரியாக இருப்பார் என்றும் கூறியுள்ளனர்.

ஏற்கனவே சசிகலா தண்டனை காலத்துக்கு முன்னரே சிறையில் இருந்து நன்னடத்தை காரணமாக விடுதலையாவார் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பின்னணியில் பா.ஜ.க இருக்கக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்