திருமணம் முடிந்த கையோடு மாலையும் கழுத்தமாக தம்பதி செய்த செயல்: குவியும் பாராட்டு

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த செயலுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கீர்த்தி ராஜ். இவருக்கு தனசிரியா என்ற இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு மாலையும் கழுத்துமாக திருமண மண்டபத்தை விட்டு கிளம்பிய தம்பதி சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீடுகளை நோக்கி சென்று தலைக்கவசம் அணிந்தபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அதாவது இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லும்படி அறிவுறுத்தினார்கள்.

தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்லும்படி காவல் துறையினர் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்