சூரையாடும் வாயு..! ரோட்டில் சென்ற வாகனத்தை பறந்து போய் தாக்கிய தண்ணீர் தொட்டி

Report Print Basu in இந்தியா

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயல், குஜராத் மாநிலத்தில் இன்று கரையைக் கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், புயல் திடீரென வடமேற்கு திசையில் நகரத்தொடங்கியுள்ளது.

இதனால், புயல் குஜராத்தை தாக்க வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனினும், கடலோரப்பகுதிகளில் புயல் காற்றுடன் கனமழை பெய்யலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 155 முதல் 165 கி.மீ வேகத்தில் காற்று வீசம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அகமதாபாத்தில் இருந்து போர்பந்தர், டையூ, காண்ட்லா, முந்த்ரா மற்றும் பாவ்நகர் பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், குஜராத், போர்பந்தரில் வீட்டில் மாடியில் இருந்த தண்ணீர் தொட்டி, காற்று வேகத்தில் பறந்து போய் ரோட்டில் சென்றுக்கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை தாக்கியுள்ளது. இதில், வாகனத்தை ஓட்டி வந்தவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

வாயு புயல் காரணமாக குஜராத்தில் ஏற்பட்டுள்ள உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்