நாட்டைய உலுக்கிய 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... அதிரடியாக தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள ஆல்வார் மாவட்டம், பெஹ்ரூர் நகரில் வசிப்பவன், ராஜ்குமார் என்ற தர்மேந்திர யாதவ்.

இவன் கடந்த 2015-ஆம் ஆண்டில் 5-வயது சிறுமியை பழைய கட்டிடம் ஒன்றிற்கு அழைத்து சென்று, அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்தான்.

இதனால் மயங்கிய சிறுமியை பெரிய கல்லால் அடித்துக் கொலை செய்தான்; சிறுமியின் பிறப்பு உறுப்பையும் சிதைத்தான்.

இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளியைகைது செய்யக் கோரி, மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.

இது தொடர்பான வழக்கு பெஹ்ரூர் நகர பொலிசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தியது.

இதில், ரேவளி என்ற இடத்தில் வசித்த, ராஜ்குமார் என்ற தர்மேந்திர யாதவ் கைது செய்யப்பட்டான்.

வழக்கு விசாரணை, ஆல்வார் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், நீதிபதி, அஜய்குமார் சர்மா வழங்கிய தீர்ப்பில், இந்தக் கொலை, அரிதிலும் அரிதான சம்பவம். பலாத்காரம் செய்த பின், சிறுமியை மிகக் கொடூரமாக தாக்கி கொன்றதோடு, தடயம் எதுவுமே கிடைத்து விடக்கூடாது என்பதற்காக, பிறப்புறுப்பையும் சிதைத்துள்ளான், குற்றவாளி தர்மேந்திர யாதவுக்கு, துாக்கு தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பு அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்