வரி ஏய்ப்பு செய்த நடிகர் வடிவேலு.. அவருக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா
755Shares

நடிகர் வடிவேலு வரி ஏய்ப்பு செய்ததாக அவருக்கு ரூ 61 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி கொமடி நடிகரான வடிவேலு கடந்த 2008 - 09ம் ஆண்டில் வருமான வரி கணக்கை முறையாக காட்டவில்லை என சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர் வீடுகளில் சோதனை செய்யப்பட்டது.

இதில் கணக்கில் வராத 1 லட்சம் ரூபாய் பணமும், 60 லட்சம் ரூபாய்க்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அது தவிர, 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதற்கான ஆதாரத்தையும், அவர் தாக்கல் செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வடிவேலுக்கு 61 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதத்தை ரத்து செய்யக் கோரி, வடிவேலு எதிர்மனு தாக்கல் செய்தார். ஆனால், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அவர் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

ஏற்கனவே பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் வடிவேலு, சமீபத்தில் இயக்குனர் ஷங்கர், சிம்புதேவன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்