அங்கு எனக்கு திருப்தி இல்லாததால் இம்முடிவை எடுத்தேன்.. நடிகர் ராதாரவி மீண்டும் அதிரடி

Report Print Raju Raju in இந்தியா
240Shares

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த நடிகர் ராதாரவி அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

திமுகவில் இருந்த பிரபல நடிகர் ராதாரவி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும் கட்சியில் இருந்து கடந்த மார்ச் மாதம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, ராதாரவியே தான் கட்சியிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் ராதாரவி இணைந்தார்.

பின்னர் ராதாரவி செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவில் நான் 18 ஆண்டுகளாக இருந்துள்ளேன், திமுகவில் எனக்கு திருப்தி இல்லை என கூறினார்.

ராதாரவி இதே போல சில தடவை அதிமுகவில் இருந்து விலகி திமுகவிலும், மீண்டும் திமுகவில் இருந்து விலகி அதிமுகவிலும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்