சென்னையில் ஆண்களின் மர்ம உறுப்பை அறுக்கும் சைக்கோ! அவரின் புகைப்படம் வெளியீடு

Report Print Raju Raju in இந்தியா

சென்னை மாதாவரம், ரெட்டேரியில் தன்பாலின உறவுக்கு அழைத்து 2 பேரின் பாலுறுப்பை அறுத்த நபரை தேடி வந்த பொலிசார் தற்போது அவரது நடமாட்டம் அடங்கிய சிடிடிவி காட்சியை வெளியிட்டுள்ளனர்.

கடந்த மாதம் 26-ம் திகதி இரவு ரெட்டேரி பாலத்தின் அடியில் படுத்திருந்த அசதுல்லா என்பவரின் பாலுறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார்.

அவர் தானே தனது உறுப்பை அறுத்துக்கொண்டதாக தெரிவித்தார். சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொலிசாரும் அதை தற்கொலை என முடிவு செய்து வழக்கை முடித்தனர்.

இந்நிலையில் அதே இடத்தில் ஒருவாரம் கழித்து ஜூன் 2-ம் திகதி நாராயணபெருமாள் என்பவரின் உறுப்பு துண்டிக்கப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரே இடத்தில் ஒரே மாதிரி சம்பவம், ஒரே மாதிரி உள்ளதை கண்டு சந்தேகமடைந்த பொலிசார் நாராயணபெருமாளிடம் விசாரித்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில் தன்பாலின உறவில் ஈடுபட்டபோது அந்த நபர் மது போதையில் இருந்த எனது உறுப்பை அறுத்துவிட்டார் என தெரிவித்திருந்தார். அப்படியானால் அசதுல்லாவும் இதேப்போன்று தன்பாலின சேர்க்கையின்போது ஆணுறுப்பு அறுக்கப்பட்டிருக்கவேண்டும் என முடிவுக்கு வந்த பொலிசார் இது குறித்து விசாரித்தனர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில், நாராயண பெருமாள் சொன்ன அடையாளத்துடன் உறுப்பை அறுத்த நபர் நடமாடும் காட்சி பதிவாகி இருந்தது.

வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்தபடி நடமாடும் அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் அந்த சைக்கோ நபர் குறித்து தகவல் தெரிவிந்தால் உடனடியாக தங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்