இந்தியாவில் பறந்து மேலெழுந்த விமானத்தில் இருந்து கசிந்த எரிபொருள்: மூடப்பட்ட விமான நிலையம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள டபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பறந்து மேலெழுந்த ராணுவ விமானத்தில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டதை அடுத்து விமான நிலையம் 2 மணி நேரம் மூடப்பட்டது.

குறித்த ராணுவ விமானத்தில் இருந்து கசிந்த எரிபொருளானது டபோலிம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளம் முழுவதும் பரவியுள்ளது.

மட்டுமின்றி அந்த விமான நிலையத்தின் முக்கிய ஓடுதளத்தின் ஒருபகுதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அப்பகுதில் கருப்புகை மேலெழும்பியது.

இச்சம்பவத்தால் அந்த விமான நிலையத்தில் வந்திறங்கும் விமானங்கள் மற்றும் வெளியேறும் விமானங்களுக்கு தாமதம் ஏற்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி விமான நிலையம் 2 மணி நேரம் மூடப்பட்டதாகவும், துரித நடவடிக்கைக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே இந்திய கடற்படையினர் அப்போது அந்த விமான நிலையத்தில் இருந்துள்ளதால், அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டதாகவும்,

ஓடுதளத்தில் காணப்பட்ட எரிபொருள் மொத்தமும் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் துரிதமாக செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். பாதிப்புக்கு உள்ளான விமானம் உடனடியாக பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

சமீபத்தில் 13 பேருடன் மாயமான ராணுவ விமானம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லாத நிலையில்,

தற்போது கடற்படைக்கு சொந்தமான விமானத்தில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்