3 வயது சிறுமி கொலையில் வெளியான திடுக்கிட வைக்கும் தகவல்: கொலையாளியின் அதிர வைக்கும் பின்னணி!

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடன் வாங்கிய தகராறில் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விவகாரம் தொடர்பில் ஜாகித் மற்றும் அஸ்லாம் என்பவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் மீட்கப்பட்ட சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும், உடல் கொடூரமாக சிதைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

குழந்தையை கொன்று மூன்று நாட்கள் அஸ்லாமும் ஜாகீத்தும் உடலை வீட்டிலேயை மறைத்து வைத்துள்ளனர்.

கொளுத்தும் வெயிலால் உடல் அழுக தொடங்கியதும் உடலை மூட்டையாக கட்டி குப்பையில் வீசியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அஸ்லாம் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது 4 வயது மகளை துஸ்பிரயோகம் செய்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக டாப்பல் நகர் காவல் நிலையத்தில் அஸ்லாம் மீது வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, சொந்த மகளையே அஸ்லாம் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதால் அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்பது குறித்து பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாத தம்பதியின் 3 வயது மகளை கடத்திய ஜாகீத் மற்றும் அஸ்லாம் ஆகிய இருவரும்,

ஆத்திரத்தில் அந்த சிறுமியை கொலை செய்துள்ளனர். குழந்தை மாயமானதை அடுத்து பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து நடந்த விசாரணையிலேயே நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் அம்பலமானது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்