மனைவி குறித்த ரகசியத்தை கண்டுபிடித்து வெறுப்படைந்த கணவன்... பின்னர் நடந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான சத்துணவு ஊழியர் வேறு ஆணுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியுள்ள்து.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மனைவி கலையரசி (33).

தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்த கலையரசிக்கு வடிவேல் (28) என்ற இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வந்த நிலையில் இதை கலையரசியின் கணவர் ஜெயக்குமார் கண்டுபிடித்தார்.

பின்னர் மனைவியை அவர் கண்டித்தும் அவர் காது கொடுத்து கேட்கவில்லை.

இதனால் வெறுப்படைந்த ஜெயக்குமார் கலையரசியை விவாகரத்து செய்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கலையரசியும், வடிவேலும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் அங்குள்ள வயலில் வி‌ஷம் குடித்து வடிவேல் இறந்துகிடந்த நிலையில் அருகில் கலையரசி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

அக்கம் பக்கத்தினர் கலையரசியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

பின்னர் தற்கொலை செய்து கொண்ட கலையரசியின் கையில் இருந்து ஒரு கடிதம் சிக்கியது. அதில் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என எழுதியிருந்தது

சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்