தோற்று போனதால் கிண்டல் செய்த தோழிகள்... பெற்றோரின் செயலால் மாணவி எடுத்த விபரீத முடிவு

Report Print Abisha in இந்தியா

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பறை பகுதியை சேர்ந்த விவசாயின் மகள் தனபிரியா. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் 9ஆம் வகுப்பு தற்போது முடிந்ததாக எண்ணிய மாணவி இந்த ஆண்டு துவங்கியதும் 10ஆம் வகுப்பில் சென்று அமர்ந்துள்ளார். பின்னர் ஆசிரியர்கள் அவர் தேர்ச்சி பெறவில்லை என்று 9ஆம் வகுப்பிலேயே போகும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

இதனை பார்த்த சகமாணவிகள் தனபிரியாவை கிண்டல் செய்ததாக கூறப்படுகின்றது. இதில் மாணவி மிக வருத்தத்துடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் பண்டிகை தின விடுமுறை என்பதால் ஒருநாள் வீட்டில் இருந்த மாணவி அடுத்தநாள் பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். பெற்றோர் அவரை வற்புறுத்தவே மனம்முடைந்து வருதத்துடன் காணப்பட்ட மாணவி தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை வழக்கு கொடுத்துள்ள நிலையில், மாணவியின் தற்கொலைக்கு வேறு என்ன காரணம் இருக்கும் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்