எனக்குப் பொறந்த குழந்தை சார்... கதறும் தந்தை: முறைகேடான உறவால் நொறுங்கிய இளைஞரின் வாழ்க்கை

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவர் தமது முன்னாள் காதலனுடன் தலைமறைவானதால், அவரது குழந்தையும் அதன் தந்தையும் தனித்து விடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்சு மாவட்டம் பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். ஹொட்டல் தொழிலில் ஈடுபட்டுவந்த இவருக்கு,

துறையூர் அருகே கீராம்பூர் என்கிற கிராமத்தில் இருந்து சரண்யா என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

4 ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டரை வயது குழந்தைக்கு தாயாரான சரண்யா, தாம் பி.சி.ஏ படித்துள்ளதால், மேலும் படிக்க வேண்டும், வேலைக்கு செல்லவேண்டும் என கூறி, கனகராஜின் சம்மதத்தை பெற்றுள்ளார்.

மனைவி மீதிருந்த பாசத்தால் துறையூர் பகுதிக்கு சரண்யாவை படிக்க அனுப்பி வைத்துள்ளார் கனகராஜ்.

இந்த நிலையில் ஒரு நாள் திடீரென்று கனகராஜை தொடர்புகொண்டு பெண் ஒருவர், தாம் சரண்யா படிக்கும் கல்லூரியில் இருந்து பேசுவதாகவும்,

சரண்யாவின் மொபைலை வாங்கிக் கொஞ்சம் பாருங்கள் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளது.

இந்த தகவலால் மன உளைச்சலுக்கு உள்ளான கனகராஜ், தமது மனைவி சரண்யா வீடு திரும்பியதும், அவரது மொபைலை சோதனையிட்டுள்ளார்.

அதில், சரண்யாவும் இன்னொரு இளைஞரும் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்கள் இருந்துள்ளது.

புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த கனகராஜ், மனைவியை தாக்கியுள்ளார். உடனே சரண்யா, தாம் தவறு செய்துவிட்டதாகவும்,

இருவரும் சிறு வயதில் இருந்தே பழக்கம் எனவும், வேறு ஜாதி என்பதால் திருமணம் செய்துகொள்ள முடியாமல் போனது எனவும்,

தற்போது திடீரென்று இருவரும் சந்தித்துக் கொண்டதால் தவறு செய்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

சரண்யாவின் பேச்சை நம்பிய கனகராஜ், அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் அடுத்த சில நாட்களில், உணவில் தூக்க மாத்திரையை கலந்து கனகராஜுக்கும் அவரது பெற்றோருக்கும் அளித்துவிட்டு,

தமது குழந்தையை எடுத்துக் கொண்டு சரண்யா அந்த இளைஞரிடம் சென்றுள்ளார். இந்த சம்பவம் தெரியவந்ததும், கனகராஜ், தமது மனைவியை மீட்டுத்தரும்படி பொலிசாரை நாடியுள்ளார்.

இதனையடுத்து கனகராஜையும் அவரது மனைவி சரண்யா மற்றும் அவரது காதலன் செல்வம் ஆகியோரை அழைத்து பொலிசார் விசாரித்துள்ளனர்.

ஒருகட்டத்தில், தமக்கு கனகராஜும் அவரது குழந்தையும் வேண்டாம் என கூறிய சரண்யா, தாம் செல்வத்துடனே வாழப்போகிறேன் என அழுத்தமாக தெரிவித்துவிட்டு, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இச்சம்பவத்தில் செலவத்தின் மனைவியும் இரு குழந்தைகளும் அழுதபடியே விசாரணை நடைபெறும் இடத்தில் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர்.

இதனிடையே தமது குழந்தையை கைப்பற்றிய கனகராஜ், இது தமக்கு பிறந்த குழந்தை, தாமே வளர்ப்பேன் என கூறி கதறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்