மனிதத்தன்மையுடன் இதை மட்டும் செய்யுங்கள்... மக்களுக்கு பிரபல நிறுவனம் முன்வைத்த நெகிழ்ச்சி கோரிக்கை

Report Print Arbin Arbin in இந்தியா

கடும் தண்ணீர்த் தட்டுப்பாடும் வாட்டிவதைக்கும் வெயிலும் தலைவிரித்தாடும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு புதிய கோரிக்கை ஒன்றை பிரபல நிறுவனம் விடுத்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களிலும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வெயிலின் தாக்கமும் இந்தமுறை கடுமையாக உள்ளது.

நகரங்களைப் பொறுத்தவரை வெயிலின் தாக்கம் காரணமாக வெளியில் வருவதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால் பலரும் உணவுத் தேவைகளை ஜொமோட்டோ, ஸ்விக்கி போன்ற ஓன்லைன் நிறுவனங்கள் மூலம் பூர்த்தி செய்துவருகின்றனர்.

தற்போது மற்ற நாட்களை விட இந்த வெயில் காலத்தில் ஓன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்பவர்களின் சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஓன்லைனில் ஆர்டர் செய்ததை டெலிவரி செய்யும் டெலிவரி பாய்கள், தண்ணீர்ப் பிரச்னையால் கஷ்டப்படுவதாக ஜொமோட்டோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதில், உங்களைத் தேடிவரும் டெலிவரி பாய்களுக்குத் தண்ணீர் கொடுங்கள். நாம் செய்யும் சிறிய உதவியால் வெப்பத்தை எதுவும் செய்ய முடியாது.

இருப்பினும் வெயிலில் இருந்து காத்துக்கொள்ள அவர்களுக்கு நீங்கள் செய்வது உதவிபுரியும்.

இது அவர்கள் பணியின் ஒரு அங்கம் என நினைக்காமல், மனிதத்தன்மையுடன் டெலிவரி செய்ய வருபவர்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தால் உதவியாக இருக்கும்.

என டெலிவரி பாய்களுக்காக ஜொமோட்டோ நிறுவனம் குரல் கொடுத்துள்ளது. இதற்கு, சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்