13பேருடன் மாயமான விமானம்: அப்டேட் செய்யாமல் பயன்பாட்டில் இருந்த அவலம்...! விடைகேட்கும் எதிர்கட்சியினர்

Report Print Abisha in இந்தியா

13பேருடன் மாயமான இந்திய விமானம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த விமான குறித்த முழு தகவல்களை பார்க்கலாம்.

அசாமின் ஜோர்கத் பகுதியில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மெஞ்சுக்கா பகுதிக்கு சென்ற விமானம் காணாமல் போனது.

இந்த விமானமானது,12:25க்கு புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 1 மணி முதல் காணவில்லை என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

ரோடாரில் கட்டுபாட்டை இழந்த விமானம் என்ன ஆனாது என்பது குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த விமானம் முக்கியமாக மலைபகுதிகளில் இராணுவ சேவைக்காக பயன்படுத்தப்படும் விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன AN-32 ரக விமானத்தை தேடும் பணியில், சுகோய் 30 மற்றும், சி 130 ரக சிறப்பு தேடுதல் விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

மேலும், விமானப்படை விமானங்கள், கடற்படையின் தேடுதல் விமானமான P8i, இஸ்ரோவின் செயற்கைக் கோள்கள் எனத் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. இருப்பினும் அந்த விமானத்தை இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.

இதற்கு காரணம், விமானத்தின் பாதுகாப்பை பலப்படுத்தாததே, அதைக் கண்டுபிடிக்க முடியாததற்குக் காரணம் என்கிறார்கள் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள்.

குறிப்பாக AN-32 ரக விமானத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் SOS எனப்படும் அவசர கால தகவல் தெரிவிக்கும் கருவி மிகம் பழமையானது என்று கூறப்படுகின்றது. AN-32 ரக விமானத்தில் SARBE 8 என்ற SOS கருவி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தக் கருவியை இங்கிலாந்தைச் சேர்ந்த Signature Industries என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. அந்தக் கருவியின் தயாரிப்பு நிறுத்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது அதிர்ச்சித் தகவல்.

AN - 32 ரக விமானங்களை மேம்படுத்துவதற்காக இந்தியா 2009-ம் ஆண்டில் உக்ரைனுடன் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதையடுத்து, AN - 32 RE ரக விமானங்கள் மேம்படுத்தப்பட்ட பின்னர், இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் காணாமல் போன விமானம் பாகங்களுக்கு ஏற்ப புதிய அப்டேட்கள் செய்யாமலே இயக்கப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம்குறித்து காங்கிரஸ் கட்சி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இது குறித்து, அக்கட்சியின் ரந்தீப்சிங் சுரேஜ்வாலா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் எழுப்பிய கேள்விகள்

  • பாதுகாப்பற்ற வான்வழியான அந்தக் குறிப்பிட்ட பகுதியில் பயணம் மேற்கொள்ள மற்ற விமானங்கள் இருக்கும் சூழலில், AN - 32 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட காரணம் என்ன...?
  • அந்த விமானத்தின் எஸ்.ஓ.எஸ் யூனிட் செயல்படாமல் இருந்ததற்கு என்ன காரணம்?
  • இந்தியா - உக்ரைன் இடையில் 2009-ம் ஆண்டே ஒப்பந்தம் கையொப்பம் ஆன நிலையிலும், அந்த விமானம் மேம்படுத்தப்படாமல் இருந்ததற்கு என்ன காரணம்?
  • AN - 32 ரக விமானங்களுக்குப் பதிலாக வேறு விமானங்களை விமானப்படையில் சேர்க்க பட்ஜெட்டில் மத்திய அரசு உரிய நிதி ஒதுக்காதது ஏன்...? இந்தக்
  • இந்த கேள்விகளுக்கு பிரதமரும் பாதுகாப்புத்துறை அமைச்சரும் பதிலளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்