மோடிக்கு எதிரான ஆலையா..? ரஜினிக்கு பாடமெடுத்த குருமூர்த்தி

Report Print Basu in இந்தியா

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, நடிகர் ரஜினிக்கு பதிலளிக்கும் வகையில் தமிழகத்தில் யாருக்கு எதிரான அலை வீசுகிறது என கேள்வியெழுப்பியுள்ளார்.

அதாவது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக மாபெரும் வெற்றிபெற்றது. அதிமுக ஒரேயொரு இடத்தை மட்டுமே கைப்பற்றியது. சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த, தமிழகத்தில் மோடிக்கு எதிரான ஆலை இருப்பதாக கூறினார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக 2 தொகுதிகளில் 5 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும், 5 தொகுதிகளில் 4 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும், 5 தொகுதிகளில் 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்றிருக்கிறது.

பாஜக 2 தொகுதிகளில் 2 லட்சத்திற்கு குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும், மூன்று லட்சத்திற்கு குறைவாக ஒரே ஒரு தொகுதியிலும், மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒரே ஒரு தொகுதியிலும் தோற்றிருக்கிறது. ஒரு வேளை மோடி எதிர்ப்பு அலை வீசியிருந்தால் எல்லா தொகுதியிலும் பாஜக 4 முதல் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்க வேண்டும். யாருக்கு எதிரான எதிர்ப்பு அலை இது? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், நான் இந்த பதிவிட காரணம் பல பொறுபுள்ள நபர்கள் மோடிக்கு எதிரான ஆலை இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால், உண்மை அதற்கு ஆதரவாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்