மோடி பதவியேற்பு விழாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

பிரதமர் பதவியேற்பு விழாவின் போது தவித்த பிரபல பாடகி ஆஷா போஸ்லேவை ஸ்மித்தி ராணி பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்தியாவின் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. 2014-ம் ஆண்டு தேர்தலைவிட இந்த முறை அதிக தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், நேற்று இரண்டாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்றார்.

அவருடன் 58 அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் மிகவும் பிரம்மாணடமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், இந்திய அரசியல் தலைவர்கள், மாநில முதல்வர்கள், எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள் என சுமார் 8,000 பேர் கலந்து கொண்டனர்.

இந்த பதவியேற்பு விழாவிற்கு பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லேவும் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்பு, கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு போன்றவைகளால் ஆஷா போஸ்லே வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து தனியாக நின்றுள்ளார்.

இதைக் கண்ட ஸ்மிருதி இரானி, ஆஷா போஸ்லேவிடம் சென்று அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவைத்து அவர் பாதுகாப்பாக வீட்டுக்குச் செல்ல உதவியுள்ளார்.

இது பற்றி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள ஆஷா போஸ்லே, பிரதமர் பதவியேற்பு விழாவில் யாரும் இல்லாமல் தவித்து தனியாக நின்றுகொண்டிருந்தேன். ஸ்மிருதி இரானியைத் தவிர வேறு யாரும் எனக்கு உதவிக்கு வரவில்லை. என் நிலை கண்டு என்னைப் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அவர் அனைத்திலும் அக்கறை காட்டுகிறார். அதனால்தான் வெற்றிபெற்றுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் ஸ்மித்தி இரானியை பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்