பிரதமர் மோடியின் அமைச்சரவையில் வயது குறைவானவர் இவர் தான்!

Report Print Kabilan in இந்தியா

இந்திய பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் பதவியேற்றுள்ள அமைச்சர்களில், மிகக் குறைந்த வயதானவராக ஸ்மிருதி இரானி இருக்கிறார்.

இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, மோடியின் அமைச்சரவையில் அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களில் வயது குறைவான அமைச்சர்களே பெரும்பாலும் உள்ளனர்.

கடந்த முறையின் மோடியின் அரசில் இருந்த அமைச்சர்களின் சராசரி வயது 62 ஆக இருந்தது. ஆனால், இந்த முறை 66 வயதான அருண் ஜெட்லி, 67 வயதான சுஷ்மா சுவராஜ் ஆகியோர் உடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்று வெளிப்படையாக தெரிவித்துவிட்டனர்.

மூத்த பா.ஜ.க தலைவர்கள் விஜய் கோயல்(65), பொன் ராதாகிருஷ்ணன்(67), எஸ்.எஸ்.அலுவாலியா(67), ரமேஷ் சந்தப்பா(66), ராஜென் கோகெயின்(68), வீரேந்திர குமார்(65) ஆகியோரும் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.

மாறாக, 44 வயதாகும் அனுராக் சிங் தாக்கூர், 46 வயதாகும் மன்சுக் மான்டவியா, சஞ்சீவ் குமார், 47 வயதாகும் கிரன் ரிஜிஜு ஆகியோரும் உள்ளார்கள். இவர்களுடன் அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட ஸ்மிருதி இரானிக்கு வயது 43 ஆகும். எனவே இவர்தான் மிகவும் வயது குறைந்த அமைச்சர் ஆவார்.

அதேசமயம், அதிக வயதுள்ள அமைச்சர்களாக லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் (73), தவார் சந்த் கெலாட்(71) மற்றும் சந்தோஷ் குமார் கெங்வார்(71) ஆகியோர் உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்