லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்த மகனுடன் சேர்ந்து தாய் தற்கொலை! கடிதத்தில் வேதனையுடன் எழுதியிருந்த காரணம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான மகனால், அவருடன் சேர்ந்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலாப்பாளையத்தைச் சேர்ந்தவர் அருள்வேல். மென் பொறியாளரான இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து வந்த இவருக்கு, ஆன்லைன் விளையாட்டான ரம்மி விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து துவக்கத்தில் சிறியை தொகையை கட்டி விளையாடிய இவர், தொடர்ந்து வெற்றி பெற்றே வந்ததால், அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வந்துள்ளார்.

இதனால் விட்ட பணத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக, அதிக பணம் கட்டி விளையாடி வந்துள்ளார்.

ஆனால் ரம்மியோ தன்னுடைய கோர முகத்தை காட்டியுள்ளது. இதனால் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த அவர், இதற்காக பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கி விளையாடியுள்ளார்.

திறமையாக விளையாடினால், இழந்த பணத்தை மீட்டு விடலாம் என நினைத்த அவருக்கு தோல்வியே கிடைத்துள்ளது.

ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்த வந்த வேலையும் பறிபோனது. செய்வதறியாது திகைத்த அருள்வேல், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றுவிட்டார்.

ஆனால், கடன் கொடுத்த நபர்கள் வீட்டிற்கு வந்து, பணத்தை திரும்பத் தர வேண்டுமென நெருக்கடி கொடுத்து வந்ததாக இச்சம்பவம் அருள்வேலையும், தாய் ராஜலட்சுமியையும் மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.

இதனால் இருவரும் விட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதை எல்லாம் தாய் ராஜலட்சுமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கடிதம் ஒன்றில் எழுதி வைத்துள்ளார். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்