நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யத்தை விட அதிக வாக்குகளை அள்ளிய டிடிவி தினகரன் கட்சி: வெளியான விபரம்

Report Print Raju Raju in இந்தியா

மக்களவை தேர்தலில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சியை விட அமமுக அதிக வாக்கு சதவீதம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக அமோக வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

ஆனாலும் மூன்று கட்சிகளும் கணிசமான வாக்குகளை பெற்றன.

இந்நிலையில் மூன்று கட்சிகளுக்கும் பதிவான வாக்குகளும், வாக்கு சதவீதமும் தெரியவந்துள்ளது.

அதன்படி அமமுகவுக்கு 2201564 வாக்குகள் பதிவான நிலையில் அதன் வாக்கு சதவீதம் 5.38% ஆகும்.

நாம் தமிழர் கட்சிக்கு 1645057 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் அதன் வாக்கு சதவீதம் 3.99% ஆக உள்ளது.

மக்கள் நீதி மய்யத்துக்கு 1575324 வாக்குகள் பதிவாகியுள்ளது. இதன் வாக்குசதவீதம் 3.94% ஆகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்