தேர்தலில் போட்டியிட்ட சீமான் மனைவியின் சகோதரர்: எவ்வளவு வாக்குகள் பெற்றார் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

மக்களவை தேர்தலில் சீமான் மனைவியின் சகோதரர் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை தெரியவந்துள்ளது.

மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் அனைத்து இடங்களிலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் சீமான் மனைவி கயல்விழியின் சகோதரர் அருள்மொழிதேவன் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

அங்கு அவர் 52,591 வாக்குகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 4,64,667 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்