திருமணமாகி 3 வருடமாகியும் குழந்தை இல்லாத பெண்... திடீரென வாந்தி எடுத்த பின்னர் நடந்த சோகம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் திருமணமாகி 3 வருடங்களாக குழந்தை இல்லாத பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியை சேர்ந்தவர் குளஞ்சிநாதன் (33). இவர், ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையில் காவலராக உள்ளார். இவருடைய மனைவி கீர்த்தனா (23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும், குழந்தைகள் இல்லை.

கீர்த்தனா அல்சர் பிரச்சினைக்காக பல நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் வாந்தி எடுத்தார். பின்னர் அவருக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து தூங்க வைத்தனர்.

ஆனால் நேற்று காலை மீண்டும் தொடர்ச்சியாக அவருக்கு வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டது. திடீரென அவர் மயங்கி விழுந்துவிட்டார். குளஞ்சிநாதன் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் இருந்த கீர்த்தனாவின் தாய் மற்றும் சகோதரர் அவரை ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கீர்த்தனா பரிதாபமாக இறந்து விட்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் கீர்த்தனா சடலத்தை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்