சீமான், கமல்... இருவரில் யாருக்கு அதிக வாக்கு; வெளியானது இறுதிநிலவரம்

Report Print Basu in இந்தியா

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக 38, அதிமுக ஒரு தொகுதியில் வென்றுள்ளது. ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதி காலியாக உள்ளது.

இந்நிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்தித்தனர்.

நாம் தமிழர் கட்சி 16.6 லட்சம் ஓட்டுக்கள் வாங்கியுள்ள நிலையில், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி 16.5 லட்சம் ஓட்டுக்கள் வாங்கியுள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 32.6 லட்சம் மக்கள் அரசியல்மாற்றம் தேவை என்பதை உணர்த்தியுள்ளார்கள்.

39 தொகுதிகளில் 27 இடங்களில் நாம்தமிழர் கட்சி மக்கள் நீதி மய்யத்தை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளது. 12 இடங்களில் மக்கள் நீதி மய்யம் அதிக வாக்குகள் பெற்றுள்ளது. 2016ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 1.07 சதவீத வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி 2019 ஆம் ஆண்டு 3.87 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் 3.78 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு கட்சிகளுக்கு கிடைத்துள்ள வாக்குகளின் மூலம் தமிழகத்தில் சுமார் 7 சதவீத மக்கள் அரசியல் மாற்றம் விரும்புகிறார்கள் என தெரியவருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்