தேர்தலில் நோட்டாவிற்கு எத்தனை சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்? வெளியான தகவல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் நோட்டாவிற்கு மட்டும் எத்தனை சதவீதம் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் ஏழு கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் 303 இடங்களில் வெற்றி பெற்று பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. காங்கிரஸ் 52 தொகுதிகளிலும், தமிழகத்தின் திமுக 23 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தேசிய அளவி மூன்றாவது பெரிய கட்சியாக் உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் நாடு முழுவதிலும் நோட்டாவிற்கு மட்டும் 1.04 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்