முதன்முறை வெற்றி... தாத்தாவுக்காக பதவியை துறக்கும் பேரன்!

Report Print Arbin Arbin in இந்தியா

கர்நாடக மாநிலம் தும்கூர் மக்களவை தொகுதியில் தோற்றுப் போன தாத்தா தேவகவுடாவுக்காக ஹாசன் தொகுதி எம்.பி. பதவியை அவரது பேரன் ராஜினாமா செய்யக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் ஹாசன், மாண்டியா உள்ளிட்ட பகுதிகள் நீண்டகாலமாக தேவகவுடா குடும்பத்தினருக்கு வெற்றியை தந்து கொண்டிருந்த தொகுதிகள்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் இப்போது ஆட்சியில் இருப்பதற்கும் காரணமான தொகுதிகள் இவை. ஆனால் இந்தமுறை இப்பகுதி மக்கள் தேவ கவுடா குடும்பத்துக்கு படுதோல்வியை பரிசளித்துள்ளனர்.

மாண்டியாவில் போட்டியிட்ட முதல்வர் குமாரசாமி மகன் நிகில் படுதோல்வியை சந்தித்தார்.

தும்கூரில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் தோற்றுப் போனார். அவரது பேரனான பிரஜ்வல் ரேவண்ணா மட்டும் ஹாசன் தொகுதியில் வெற்றி கண்டார்.

இந்நிலையில் தாத்தா தேவகவுடா மீண்டும் ஹாசனில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்பதற்காக முதன்முறையாக அரசியல் களம் கண்டு அதில் வெற்றியும் ருசித்த பிரஜ்வல் ரேவண்ணா தமது எம்.பிபதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்