ஸ்மிருதின்னா யாரு என அன்று கிண்டலடிக்கப்பட்ட பெண்... இன்று ராகுல்காந்தியை தோற்கடித்து அவர் கொடுத்த பதிலடி

Report Print Raju Raju in இந்தியா

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியை யார் அவர் என பிரியங்கா காந்தி கிண்டலாக முன்னர் கேட்ட நிலையில் அவர் ராகுல்காந்தியை அமேதி தொகுதியில் தோற்கடித்ததன் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பா.ஜ.க மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்பாளராக நின்ற நிலையில் அவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் அமைச்சர் ஸ்மிருதி இராணி களம் கண்டார்.

ஏற்கனவே கடந்த 2014 தேர்தலில் ராகுல் காந்தியிடம், ஸ்மிருதி தோற்றிருந்த நிலையில் இம்முறை விஷ்வரூபம் எடுத்து 35000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ராகுல்காந்திக்கு ஆதரவாக அவரின் சகோதரி பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் செய்த போது அவரிடம் செய்தியாளர்கள் ஸ்மிருதி இராணி குறித்து கேட்டனர்.

அதற்கு, ஸ்மிருதியா, அப்படினா யாரு? என்று செய்தியாளர்களிடத்தில் பிரியங்கா திருப்பிக் கேட்டார். ஸ்மிருதி குறித்து எதுவும் சொல்லாமலேயே பிரியங்கா சென்றுவிட்டார்.

மேலும் பிரசாரத்தின் போது ஸ்மிருதியை வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர், அமேதி மக்களைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்பட மாட்டார் என்று பல இடங்களில் பேசிவந்தார்

ஆனால் ஸ்மிருதி இராணி இன்று அபார வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அவரை யார் என கேட்ட பிரியங்காவின் முகம் தொங்கி போயுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்