தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திமுக! ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

Report Print Kabilan in இந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க பெருவாரியாக தமிழகத்தில் வெற்றி பெற்றிருப்பதற்கு, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதில், பா.ஜ.க பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

தமிழகத்தில் தி.மு.க கூட்டணி 37 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தி.மு.கவின் மாபெரும் வெற்றிக்கு, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ரஜினிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரது ட்வீட்டைக் குறிப்பிட்டு ‘தங்களின் வாழ்த்துகளுக்கு அன்பும்! நன்றியும்!’ என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க தலைவர் மோடிக்கும் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்