பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு நடந்த கொடூரம்... அதிமுக-வை பழி தீர்த்த மக்கள்!

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக கட்சியினரை சேர்ந்த சிலர் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவிற்கு அமோக வெற்றியை கொடுத்துள்ளனர்.

சமீபகாலமாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பால பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை கொடுத்தது.

இதில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பெண் ஒருவர் கூறியிருந்தார். அதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசும் பல பெண்களை ஏமாற்றி பாலியல்பலாத்காரம் செய்திருப்பதும் தெரியவந்தது.

அதுமட்மின்றி இதில் அதிமுக கட்சியினைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் அப்போதிலிருந்தே பொள்ளாச்சி மக்கள் அதிமுகவின் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

இதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த போது, மக்களவை தேர்தல் அதற்கு ஏற்ற வகையில் வர இதை திமுக தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டது. அதிமுக-வின் கோட்டையாக இருந்த பொள்ளாச்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று திமுக-வினர் திட்டம் தீட்டி வந்தனர்.

ஏழுமுறை அ.தி.மு.க இங்கு நேரடியாக வெற்றி பெற்றுள்ளது. மேலும், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், ஐந்து தொகுதிகள் அ.தி.மு.க வசம் உள்ளன.

பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லாத எம்.பி மகேந்திரன், மீண்டும் வேட்பாளர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் என இரண்டு மூத்த அமைச்சர்கள் என்று அ.தி.மு.க-வுக்கு பொள்ளாச்சியில் பலம் நிறைந்து காணப்பட்டது.

பொள்ளாச்சி வழக்கு எங்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற பயத்தில் இருந்தாலும், மக்கள் அதை எல்லாம் சில நாட்களில் மறந்துவிடுவர், மகேந்திரன் வெற்றி பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

இருப்பினும் அதிமுக-வின் கோட்டையாக இருந்த பொள்ளாச்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று திமுக-வினர் திட்டம் தீட்டி வந்தனர். இதற்காக தனிக்குழு நியமிக்கப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்குதான் இவர்களின் அஸ்திரமாக இருந்தது. பொள்ளாச்சி தொகுதியில் பெண்கள் வாக்குகள் அதிகம் என்பதால், அது தி.மு.க-வுக்கு சாதகமாகவும் முடிந்துவிட்டது.

இதனால் நேற்று நடந்த மொத்தம் 22 சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகள் முடிவில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 883 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க பிரமாண்ட வெற்றிபெற்றது.

இதன்மூலம், 39 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க வெற்றிபெற்றுள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு, தி.மு.க வேட்பாளர் சி.டி.தண்டபாணி வெற்றிபெற்றார். அதன் பிறகு தி.மு.க இங்கு இந்தத் தேர்தலில்தான் நேரடியாக வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்