பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பவன் கல்யாணின் கட்சி படுதோல்வி! காரணம் என்ன?

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் வெளியானது. ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் ஆக உள்ளார்.

ஆனால், இந்த தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரு தொகுதியை மட்டுமே வென்று தோல்வியுற்றது. ஆந்திர அரசியல் ஜனசேனா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.

கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் குஜ்ஜூவாடா, பீமாவரம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரது சகோதரர் நடிகர் சிரஞ்சீவி, 2009ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது 18 இடங்களில் வெற்றி பெற்றார்.

தோல்வி குறித்து பவன் கல்யாண் கூறுகையில், ‘புதிய அலை அரசியல் என்ற கருத்துடன் மக்களுக்கு சேவை செய்ய வந்தேன். என் அரசியல் பயணம் அதே தடத்தில் மீண்டும் தொடரும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனசேனாவின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், வாக்குகளை பிரிப்பதில் ஜனசேனா தோல்வியடைந்து விட்டது. எதிர்பார்த்த சமுதாய வாக்குகளையும் இழந்துவிட்டது. சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான அலையில், எங்கள் கட்சி அதிக வாக்குகளைப் பெற முடியாமல் போய்விட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்