எங்கு தவறு நடந்தது? ராகுல் காந்தியின் தேர்தல் வியூகம் தோல்வி அடைந்ததன் பின்னணி இதுதானாம்

Report Print Raju Raju in இந்தியா

மக்களவைத் தே‌ர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் வியூகம் தோல்வி அடைந்துள்ள நிலையில் அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

மக்களவை தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.

பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, ரஃபேல் விவகாரம் என அக்கட்சி சறுக்கிய விவகாரங்களை கையில் எடுத்து, இந்த மக்களவைத் தேர்தலை சந்தித்தார் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி.

மேலும், மாதம்தோறும் ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் செலுத்தும் திட்டம், ஜிஎஸ்டி எளிமையாக்கப்படும், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அடுக்கடுக்கான தேர்தல் வாக்குறுதிகளையும் காங்கிரஸ் சார்பாக வழங்கினார்.

பாரதிய ஜனதாவுக்கு எதிராக வகுத்த வியூகம் சரியாக சென்று கொண்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றமே பிரதமரை திருடன் என உறுதி செய்துவிட்டாக ரஃபேல் பேர விவகாரத்தை பேசி, சர்ச்சையில் சிக்கினார். இதற்காக உச்சநீதிமன்றத்திலும் அவர் இருமுறை மன்னிப்பு கேட்க நேர்ந்தது அவரது செல்வாக்கை சரிய வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

தவிர ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் 6 ரூபாய் பணம் செலுத்துவதாக அறிவித்த நியாயத் திட்டமும் பெரிதாக எடுபடவில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மோடிக்கு எதிரான அலை வீசியபோதும், அதை சரியாக அறுவடை செய்வதற்கு தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அவர் ஒழுங்குப்படுத்த தவறி விட்டதும் தோல்விக்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது.

2014 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட அடைய முடியாத அளவுக்கு அடைந்த அதே படுதோல்வியை, இந்தத் தேர்தலிலும் சந்தித்திருப்பதால், தோல்விக்கு ராகுல் தான் காரணம் என்பதாக தற்போதும் விமர்சனங்கள் எழும் சூழல் உருவாகியிருக்கிறது.

அதைபுரிந்து கொண்டவர் போல, இந்தத் தோல்விக்கு நூறு சதவிகிதம் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers