17 ஆண்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கையில் மிதந்த இளம்பெண்

Report Print Vijay Amburore in இந்தியா

சேலம் மாவட்டத்தில் திருமண ஆசைகாட்டி 17 ஆண்களை பெண் ஒருவர் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் பழைய தங்கம், வைர நகைகளை ஏலத்தில் எடுத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் கடந்த 2016ம் ஆண்டு திருமணத்திற்காக தமிழ் மேட்ரிமோனி இணையதளத்தில் தன்னை பற்றிய விவரங்களை பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த சேலத்தை சேர்ந்த மேகலா என்பவர், அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனையடுத்து இருவரும் தங்களுடைய செல்போன் எங்களை மாற்றிக்கொண்டு தினமும் பேச ஆரம்பித்துள்ளனர்.

ஒருகட்டத்தில் மேகலா மீது பாலமுருகனுக்கு காதல் மலர்ந்துள்ளது. சென்னையில் வேலை செய்துவருவதாக மேகலா கூறியதை கேட்டு அவரை சந்திப்பதற்காக பாலமுருகன் சென்னை சென்றுள்ளார்.

அங்கு தனது குடும்ப கஷ்டங்களை கூறி லட்சக்கணக்கில் பணம், தங்க, வைர நகைகள், துணிகள் என பலமுருகனிடம் இருந்து மேகலா பறிக்க ஆரம்பித்துள்ளார்.

அதேசமயம் அவருடைய மாமன் கணபதியுடன், மேகலா நெருக்கத்துடன் இருப்பதாக பாலமுருகனின் நண்பர்கள் கூறியுள்ளார்.

இதனை கேள்விப்பட்டு சந்தேகமடைந்த பாலமுருகன், மேகலா குறித்து விசாரணையில் இறங்கியுள்ளார். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் பலமுருகனுக்கு கிடைத்துள்ளன.

கரூர் சிவக்கொழுந்து, பல்லடம் ஆனந்த், ஈரோடு குணசேகர், கோவை ஸ்ரீதர் திருப்பதி, கணபதி உள்ளிட்ட 17 பேருடன் மேகலா உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளார். அலுவலக ஊழியர்களுடன் பயிற்சிக்கு செல்வதாகக் கூறிவிட்டு ஊட்டியில், சென்னையிலும் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார்.

இதுகுறித்து மேகலாவிடம் கேட்டதற்கு, ஆம் உண்மை தான், உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ எனக்கூறி பலமுருகனுக்கு இன்னும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரபலமான வார இதழ் ஒன்றுக்கு கண்ணீர் மல்க பேட்டியளித்திருக்கும் பாலமுருகன், மேகலாவின் பேச்சை நம்பி இதுவரை 35 லட்சத்திற்கும் அதிகம் செலவு செய்திருப்பதாக கூறியுள்ளார். பொலிஸாரிடம் புகார் கொடுத்தால், பாதிக்கப்பட்ட 17 பேரையும் அழைத்து வந்தால் மட்டுமே வழக்கு பதியப்படும் என கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்