தமிழகம் தனித்தன்மை வாய்ந்தது: வெற்றிக்கு பின் கனிமொழி

Report Print Vijay Amburore in இந்தியா

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கனிமொழி, மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜகவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த 18ம் திகதி நடைபெற்ற மக்களைவை தேர்தலில், திமுகவின் சார்பில் கனிமொழி, அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், அ.ம.மு.க. சார்பில் வக்கீல் புவனேஸ்வரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொன்குமரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 37 பேர் போட்டியிட்டனர்.

இதற்கான வாக்கு எண்ணிக்கையில் இன்று காலை முதலே திமுகவின் கனிமொழி முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில் 3,47,209 வாக்குகள் பெற்று கனிமொழி வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கனிமொழி, மத்தியில் மீண்டும் ஆட்சியமைத்துள்ள பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார்.

மேலும் திமுக பெற்றுள்ள வெற்றி, தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே காட்டுவதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்