மகத்தான வெற்றி பெற்றும் பாஜக-வை அண்டவிடாமல் தடுத்த இரண்டு மாநிலங்கள் எது தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் நடந்த மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றியை பாஜக பெற்றிருந்தாலும், இரண்டு மாநிலங்களில் அதனால் ஒரு வெற்றி கூட பெற முடியவில்லை என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த 1984-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பாஜக எப்படி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்ததோ, அதே போன்று இப்போது மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையோடு மிகப் பெரிய வெற்றியுடன் வரலாற்று சாதனை படைக்கவுள்ளது.

இதனால் பாஜக தொண்டர்கள் இந்த வெற்றியை பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பாஜகவின் வெற்றியை தொண்டர்கள் எப்படி கொண்டாடி வருகின்றனர் என்பது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதைத் தொடர்ந்து தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா வெற்றி உரையாற்றி வருகிறார்.

இப்படி இந்தியாவின் பல மாநிலங்களில் அபார வெற்றி பெற்றிருக்கும் பாஜக, இரண்டு மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் உள்ளது.

அதில் ஒன்று தமிழ்நாடு, இங்கு அதிமுக-வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட போதும் பாஜக தான் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. கூட்டணி கட்சியான அதிமுக மட்டும் தேனி தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 29 தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 9 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தை தொடர்ந்து, ஆந்திராவிலும் பாஜக-வினால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

மொத்தமுள்ள 25 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி முகம் காட்டுகிறது.

இதற்கிடையே தெலுங்கு தேசம் கட்சிக்கு 6 தொகுதிகளில் இழுபறி நீடித்தாலும் பாஜகவுக்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்