வாழ்வா..சாவா! தோராயத்தில் அதிமுக.. 10ல் ஒன்றில் தோல்வியடைந்தால் கூட ஆட்சிக்கு ஆபத்து

Report Print Basu in இந்தியா

தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் அதிமுக-வின் நிலை வாழ்வா, சாவா என இருக்கிறது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி, அதிமுகவில் 114, திமுகவில் 97, சுயேட்சை 1 என மொத்தம் 212 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள 22 தொகுதிகளில் மொத்தம் 10 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். ஏனென்றால் கூட்டணியில் இருக்கும் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் அதிமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.

அதேநேரம் அதிமுகவில் இருக்கும் கலைச்செல்வன்(விருதாச்சலம்), ரத்தினசபாபதி(அறந்தாங்கி), பிரபு(கள்ளக்குறிச்சி) ஆகிய எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாகவே தினகரனை ஆதரிக்கின்றனர். ஒருவேளை இவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிக்கவில்லையென்றால் அதிமுகவின் எண்ணிக்கை 108 ஆக குறைந்துவிடும். இதனால்தான் 10 தொகுதிகளில் வெற்றி தேவை.

திமுக கூட்டணி இணக்கமாகவே இருக்கிறது. ஆதலால் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க, மொத்தம் 21 தொகுதிகளில் வென்றாக வேண்டும் (திமுக கூட்டணி 97 +21=118). அப்படி வெற்றிபெற்றால் அவர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியும். இவற்றில் ஒன்றிரண்டு குறைந்தாலும் கடினமாகிவிடும்.

இந்நிலையில் 22 தொகுதிகளில் 13 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஒருவேளை தேர்தல் முடிவக்கு பின்னர் திமுக தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதிமுக பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்