தமிழர்கள் உப்பு போட்டு சாப்பிடுபவர்களா... காலம் பதில் சொல்லும் என பாஜக தலைவர் சூசகம்

Report Print Basu in இந்தியா

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன், தேர்தல் முடிவால் ஏற்படும் இழப்பு யாருக்கு என்பதை காலம் பதில் சொல்லும் என பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை, திமுக வேட்பாளர் கனிமொழியிடம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளார்.

இந்நிலையில், தமிழர்கள் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் என்பதை நிரூபித்தனர். சாதாரண உப்பில்லை தூத்துக்குடி உப்பு என தூத்துக்குடியை சார்ந்தவர் என அறியப்படும் ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன், உப்பு அதிகம் சாப்பிட்டால் உடல்நலன் பாதிக்கும் உயர்ரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்பு இதயநோய் வரும் உங்கள் குடும்ப டாக்டரை கேட்டால் உண்மை புரியும் ?இழப்பு யாருக்கு ? காலம் பதில் சொல்லும்? என தெரிவித்துள்ளார்.

என்ன தான் தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியை கூட முன்னிலையில் இல்லை என்றாலும், அவர்கள் தான் இந்தியாவை அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆளப்போகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers