தேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய மோடி

Report Print Arbin Arbin in இந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றியை அடுத்து டுவிட்டரில் சௌக்கிதார் என்ற தனது அடைமொழியை நீக்கியுள்ளார் நரேந்திர மோடி.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி 353 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இதனையடுத்து அந்த கட்சி எதிர்வரும் 26 ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமையை கோர உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஒரு மாத காலமாக தமது டுவிட்டர் பக்கத்தில் செளக்கிதார் என்ற அடைமொழியை பயன்படுத்தி வந்துள்ளார்.

யுத்த விமானம் ஒப்பந்தம் தொடர்பில் நரேந்திர மோடி ஊழல் புரிந்துள்ளதாக கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செளகிதார் ஒரு திருடர் என்ற சொல்லாடலை தேர்தல் பரப்புரை எங்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.

குறித்த சொல்லாடலானது பொதுமக்களின் உணர்வு என்றே ராகுல் காந்தி அதற்கு விளக்கமும் அளித்திருந்தார்.

ஆனால் இந்த சொல்லாடலை எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் பலர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் செளக்கிதார் என்ற அடைமொழியை பயன்படுத்தி வந்துள்ளனர்.

தற்போது தேர்தலில் பாஜக அபார வெற்றியை எட்டியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் செளக்கிதார் என்ற அடைமொழியை நீக்கியுள்ளனர்.

ஆனால் இது பொதுமக்களை ஏமாற்றும் செயல் எனவும், தேர்தல் காலத்தில் செளக்கிதார் என்ற அடைமொழியை பயன்படுத்தி இந்திய மக்களை மோடி ஏமாற்றியுள்ளார் எனவும் பலர் கருத்து பகிர்ந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்