தோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டி

Report Print Basu in இந்தியா

இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் மோடி அடுத்த பிரதமராக பதிவியேற்பது உறுதியாகியுள்ளது.

மொத்தம் தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி 346 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது, காங்கிரஸ் கூட்டணி 93 தொகுதிகளிலும், மற்றவை 103 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில் பாஜக தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி டில்லியில் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, வெளிப்படையாக கூறுகிறேன், நான் நினைத்ததில் ஏற்பட்ட தவறுகள் குறித்து விவாதிக்கும் நாள் இன்று அல்ல, ஏனெனில், நரேந்திர மோடி தான் பிரதமர் என இந்திய தெளிவாக முடிவுசெய்துள்ளது, ஒரு இந்தியனாக நான் அதை மதிக்கிறேன்.

மோடிக்கு வாழ்த்துக்கள், அவர் நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார் என நம்புகிறேன். அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல், அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிதி ராணியிடம் பெருவாரியான வாக்குகள் பின்தங்கிய நிலையில் உள்ளார். எனினும், வயநாட்டில் வெற்றி உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய ராகுல், அமேதி தொகுதியில் தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். மக்களின் முடிவை நான் மதிக்கிறேன், ஸ்மிதி ராணிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்