எனது கன்னத்தில் விழுந்த வலுவான அறை: தேர்தல் முடிவுகள் குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து

Report Print Arbin Arbin in இந்தியா

எனது கன்னத்தில் வலுவான அறை விழுந்துள்ளது என்று மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

பிற்பகல் 1.45 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 347 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 88 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

மத்தியில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. இந்தத் தேர்தலில் முதன்முறையாக அரசியல் களம் கண்டார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ், பிற்பகல் 1.50 நிலவரப்படி 24, 718 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் அவர் தோற்பது உறுதியாகிவிட்டது.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பதிவில், எனது கன்னத்தில் வலுவான அறை விழுந்துள்ளது.

இன்னமும் அதிக கிண்டல்கள், இழி சொற்கள், அவமானங்கள் என் வழியில் வருகின்றன. நான் எனது நிலையில் உறுதியாக நிற்பேன். மதச்சார்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும். கடுமையான பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி. ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers