தேர்தலில் அபார வெற்றி பெற்ற பிரபல நடிகை ரோஜா

Report Print Raju Raju in இந்தியா

ஆந்திராவின் நகரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.

ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக முதல் முறையாக பதவியேற்கவுள்ளார்.

அந்த கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா அபார வெற்றி பெற்றுள்ளார்.

ஏற்கனவே நகரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் ரோஜா மீண்டும் அந்த தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers