நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்!

Report Print Kabilan in இந்தியா

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் பா.ஜ.க கட்சி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி முதல் கடந்த 19ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆளும் பா.ஜ.க 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அணி மீண்டும் ஆட்சியில் அமரும் என்பது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தலைவர்கள் பலர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் தனது வாழ்த்துக்களை மோடிக்கு தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘வாழ்த்துக்கள், எனது நண்பர் @Narendramodi, விரும்பும் வகையில் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு! உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இந்த தேர்தலின் முடிவு மீண்டும் உங்கள் ஆட்சியை உறுதிபடுத்தியுள்ளது.இந்தியா-இஸ்ரேல் நட்புறவை தொடர்ந்து வலுப்படுத்துவோம். சிறப்பு எனது நண்பரே’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்