25ஆண்டு கால கோட்டையை தகர்த்து வென்றது காங்கிரஸ்...

Report Print Abisha in இந்தியா

கோவா முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் தொகுதியை காங்கிஸ் கட்சி கைபற்றி உள்ளது.

கோவா முன்னாள் முதலமைச்சர் மனோகர் பரிக்கர் புற்றுநோய்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சமீபத்தில் மரணம் அடைந்தாா்.

அந்த தொகுதியில், பாராளுமன்ற தேர்தலுடன் அவர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த பனாஜி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தலில் நடந்தது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் வெளியான நிலையில் இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அட்டனாசியோ மான்செராட்டே 8,748 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சித்தார்த் குன்கோலியேன்கர் 6,990 வாக்குளை பெற்று தோல்வியை தழுவி உள்ளார்.

இந்த தோல்வியின் மூலம் சுமார் 25 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்த பனாஜி தொகுதியை தற்போது காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்