அபார வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி... மற்றொரு தொகுதியிலும் ஆதிக்கம்

Report Print Santhan in இந்தியா

மக்களவை தேர்தலுக்கான வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி அபாரா வெற்றி பெற்றதுடன் அமேதி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.

இந்தியாவில் எழு கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

இதில் உத்திரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார்.

முதலில் அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்த அவர் தற்போது, முன்னிலை பெற்று வருகிறார்.

இந்நிலையில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்