மோடிக்கு இலங்கையில் இருந்து பறந்த வாழ்த்துக்கள்... ரணில், ராஜபக்சே ட்விட்

Report Print Basu in இந்தியா

இந்திய லோக்சபா தேர்தலில் மோடியின் பாரதிய ஜனதா கட்சி பெருபான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மஹிந்த ராஜபக்சே ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக அரியணை ஏறும் மோடிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். உங்களுக்கும், இந்திய மக்களுக்கும் வாழ்த்துக்கள், உங்கள் சிறந்த தலைமையின் கீழ் இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் உங்கள் பயணத்தை நீங்கள் தொடருங்கள்.

உங்கள் தலைமையின்கீழ் பரஸ்பர நலனுக்காக அதை மேலும் பலப்படுத்துவதற்காக நாங்கள் பகிர்ந்துள்ள மற்றும் வேலை செய்யும் வலுவான இருதரப்பு உறவுகளில் தொடர்ந்து எங்கள் நாடுகள் இருக்குமென நம்புகிறோம் என வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதே சமயம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் மோடிக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், அற்புதமான வெற்றிப்பெற்ற மோடிக்கு வாழ்த்துக்கள். நாம் உங்களுடன் நெருங்கிப் பணியாற்ற எதிர்நோக்கி இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்