எதிர்க்கட்சிகளே வாக்கு இயந்திரங்கள் மீது பழி போடாதீர்கள்! பிரபல எழுத்தாளர் சேதன் பகத்

Report Print Kabilan in இந்தியா

இந்திய நாடாளுமன்ற தேர்தல் பா.ஜ.க முன்னிலை வகித்து வரும் நிலையில், பிரபல எழுத்தாளர் சேதன் பகத் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பா.ஜ.க பல இடங்களை கைப்பற்றி முன்னிலை வகித்து வருவதால், மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து பிரபல எழுத்தாளர் சேதன் பகத் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘எதிர்க்கட்சிகளே, வாக்கு இயந்திரங்கள் மீது பழி போடாதீர்கள். உங்கள் மீது போட்டுக் கொள்ளுங்கள்.

உங்களுக்குள் ஆராய்ந்து என்ன ஆனது என உண்மையாகப் பாருங்கள். இந்த வீழ்ச்சிக்கு யார் பொறுப்பென்று நம் அனைவருக்கும் தெரியும். அதை சத்தமாக, தெளிவாக கூறும் தைரியத்தை இப்போது பெறுங்கள்.

குடும்பம் என்பது சொத்தாக இருப்பதை விட பொறுப்பாக/சுமையாக மாறிவிட்டது. இந்தியா உரக்க, தெளிவாகப் பேசிவிட்டது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்