இடைத்தேர்தல் நிலவரம்! கம்பம் தொகுதியில் எழுந்தது சர்ச்சை

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் இன்று இடைத்தேர்தல் நடந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வரும் நிலையில், கம்பம் தொகுதியில் சர்ச்சை எழுந்துள்ளது.

அதாவது, முதல் மேசையில் வைக்கப்பட்ட இயந்திரத்தின் எண்ணும், கட்சி முகவர்களின் கையிலிருந்த இயந்திரத்தின் எண்ணும் வேறுபாடு உள்ளது.

மேலும், அதில் உள்ள கட்சி முகவர்களின் கையெழுத்தும் வேறுபடுகிறது. இதனை அ.ம.மு.க முகவர்கள் கண்டுபிடித்து, எந்திரத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மொத்தமுள்ள 14 மேசைகளில் ஒரு மேசை மட்டும் எண்ணப்படாததால், முதல் சுற்று இன்னும் முடியாமல் உள்ளது.

வாக்குப் பதிவு எந்திரத்தை மாற்ற முயற்சியா என எதிர்க்கட்சியினர் சந்தேகம் கிளப்பியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்