பாஜக வெற்றி பெற்றால் இரு முதலமைச்சர்களுக்கு ஆபத்து : அங்கும் முன்னிலையில் பாஜக....

Report Print Abisha in இந்தியா

இன்றைய தேர்தல் முடிவுகளின் நிலவரத்தால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆகியோரின் எதிர்காலத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குமாரசாமி வெள்ளிக்கிழமை வரைதான் முதலமைச்சராக நீடிப்பார் என்று முன்னதாக, மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா அறிவித்திருந்தார்.

ஏனெனில், கர்நாடாகவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் தான் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டணியில் தற்போது விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில் கர்நாடகத்தில் பாஜகவுக்கு சாதகமான பலம் கிடைத்தால் அது மாநிலத்தில் ஆட்சிமாற்றத்துக்கு வழிவகுக்கக் கூடும் என தெரிகிறது. அங்கு தற்போது பாஜக வேட்பாளரே முன்னிலையும் வகிக்கிறார்.

இதே போன்று, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கும் தேர்தல் முடிவு பாதகமாக இருக்கக்கூடும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியது. பா.ஜ.க. வெற்றிபெறும் பட்சத்தில் கெஜ்ரிவால் அரசுக்கு தலைவலியாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் அங்கும் பாஜக வேட்பாளர் கௌதம்கம்பீர் முன்னிலை வகிக்கிறார்.

முடிவுகள்தான் இரு முதலமைச்சர்களுக்கும் வாழ்வா சாவா என்று தீர்மானிக்கு என்பது போன்ற சூழல் நிலவுக்கின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்