பெரிய தலைவர்கள் இல்லை... வெற்றி குறித்து கணிக்க முடியாது-தமிழிசை

Report Print Abisha in இந்தியா

தமிழக பாஜக தலைவர், பெரிய இருதலைவர்கள் தமிழகத்தில் இல்லாத சூழலில் வெற்றி குறித்து முன்கூட்டியே கணிக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை செய்தியாளர்கள் சந்திப்பில், பாஜக தேர்தல் முடிவுகளை உற்சாகத்துடன் எதிர்நோக்கி கொண்டு இருக்கிறது. கருத்து கணிப்புகளும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளன. என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கள நிலவரத்தை யாரும் கணிக்க முடியாத சூழ்நிலையாக உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை பெறும். 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி என 2 முக்கிய தலைவர்கள் இல்லாத தேர்தல் என்பதால் வெற்றி யாருக்கு? என கணிக்க முடியாத நிலை உள்ளது.

நடிகர் கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன், சீமான் ஆகிய 3 புதிய முகங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்? என்பது பெரிய அளவில் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்