தூத்துக்குடி தொகுதியில் தமிழிசையை முந்துகிறார் கனிமொழி! 5000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

Report Print Raju Raju in இந்தியா

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 5000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் திகதி முடிவடைந்தது.

இந்நிலையில், இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

இதில், தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார். தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி மற்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இடையே கடும் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்